நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடியின் பத்தாண்டுக் கால ஆட்சியின் மகத்தான சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு வாக்கு கேட்க உள்ளோம். அதேபோல கடந்த திமுக ஆட்சியின் 30 மாத ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்க உள்ளோம்.
திமுக அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வருகிறார்கள். கோடி கோடியாகச் சொத்துக்களைக் குவித்து வருகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. பொது மக்களே சொல்கிறார்கள்.
தமிழக அமைச்சர்களுக்கு ஏராளமான மருத்துவக் கல்லூரிகல், பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தற்போது புகாரின் அடிப்படையில்தான் வருமானவரித்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. நாட்டிலே எங்கும் இல்லாத அளவு தமிழகத்தில் மட்டும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் சட்டத்திற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
தமிழகத்தில் பொது இடங்களில் பாஜக கொடியை ஏற்றினால் கூட காவல்துறை கைது செய்கின்றனர். காரணம், பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு திமுக பயப்படுகிறது என்றார்.