பாகிஸ்தான் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டது. பின்னர் அவர் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமானதால் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம் ஆனது.
இதுதொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது 2024ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அடுத்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.