திருநெல்வேலி மாவட்டம் மாவட்டம் சிவந்திபட்டி அருகே தெற்கு வெட்டியபந்தி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 30 -ம் தேதி ஆச்சிமடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து பிரச்சினை செய்துள்ளது. ஒரு கட்டத்தில் அவரது சாதியைக் கேட்ட உடன் கொதித்துப்போய், நீ எல்லாம் இங்கே எதற்கு வந்தாய்? என்று கல்லால் தாக்கியுள்ளனர். இதில், மாரியப்பனின் தலை, வாய் மற்றும் உடம்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதில், படுகாயமடைந்த மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் சிவந்திப்பட்டி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பட்டியல் இன சிறுவர்கள் நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்ட நிலையில், தற்போது சாதி ரீதியான தாக்குதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.