வடகிழக்கு மாநிலமான சத்தீஸ்கர், மிசோரமில், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை(நவ.,07) ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
சத்தீஷ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சுயேச்சை என 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 40.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். சுமார் 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் 40 தொகுதிகள் கொண்ட மிசோராமில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 8.5 லட்சம் பேர் வாக்காளர்களுக்காக 1,276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாஜக, மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.பதற்றம் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.