புதுசு புதுசா யோசனை செய்து பதக்கங்களை வழங்கும் இந்திய பில்டிங் கோச் திலிப்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி வருகிறது. இந்தியா விளையாடிய 8 போட்டிகளில் 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு பக்க சதங்களை விளாச இந்திய பந்துவீச்சாளர்களை விக்கெட்களை குவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பில்டிங்கிலும் அபாரமக கேட்ச் பிடித்து ரன்களை காப்பாற்றி ரன் அவுட் செய்து வருகின்றனர்.
ஆகையால் சிறந்த பீல்டரை கௌவவிக்கும் விதமாக சிறந்த பீல்டருக்காக விருது கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிறந்த பீல்டரை சரியான இடத்தில் நிறுத்திய விதம் மற்றும் பவுலர்களை பயன்படுத்திய விதம் ஆகியவற்றின் மூலமாக தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துக் காட்டிய ரோகித் சர்மாவுக்கு சிறந்த கேப்டனுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை அறிவிக்க மைதானத்திற்கு சென்று நேற்றையப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ், ஜடேஜா, ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோராய் நிற்க வைத்து நகரும் காமெராவை சுற்றவைத்தனர்.
இந்த கேமரா யாரை நோக்கி நிற்கிறதோ அவருக்கு தான் விருது என்ற அடிப்படையில் இவ்வாறு செய்தனர். அதன் மூலம் அந்த கேமரா ரோஹித் ஷர்மாவை நோக்கி நின்றதால் அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
ரோகித் சர்மாவுக்கு சிறந்த கேப்டனுக்கான விருதை ஷ்ரேயாஸ் ஐயர் வழங்கியுள்ளார். இதனை பிசிசிஐ தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.