விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, நீல வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகிறது.
நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில், மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ இரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு நீல வழித்தடத்தில் தற்போது மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
மெட்ரோ இரயில்களில் எதிர்பாராத காலகட்டத்தில் திடீர் என்று ஏற்படும் தடங்கல்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மெட்ரோ பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நன்றி தெரிவித்து உள்ளது.