இந்தியர்களாகிய நாம் பல அற்புதமான காட்சிகளைக் காண உலகின் எல்லா மூலைகளுக்கும் பயணிக்கிறோம், ஆனால் நம்மில் பலர் பார்த்திராத , ஒருவேளை அறியாத அற்புதமான விஷயங்களும் இந்தியாவில் உள்ளன.
இந்தியா பல அழகான வித்தியாசமான விஷயங்களை கொண்டுள்ளது. அதிலும் இயற்கை அழகிற்கு தாயகமாக காஷ்மீர் உள்ளது.
கம்பீரமான மலைகள், வண்ணமயமான ஏரிகள், பனி மூடிய சிகரங்கள் என எங்கு பார்த்தாலும் அழகிய காட்சிகளுடன் நம்மை வரவேற்கும் காஷ்மீர், உலகின் மிதக்கும் ஒரே தபால் நிலையத்தை கொண்டுள்ளது.
உலகில் இணையம் மற்றும் மொபைல் போன் நெட்வொர்க்குகளுக்கு முன்னர், அஞ்சல் சேவையானது ஒரு முக்கியமான உயிர்நாடியாக திகழ்ந்தது.
இந்நிலையில் ஸ்ரீநகர் நகரின் நேரு பூங்காவிற்கு அருகில், ஏரிக்கரையில் வசிக்கும் மக்களுக்கு தபால் சேவையை அளிப்பதற்காக மரத்தால் ஆன ஷிகாரா படகுகளின் வரிசைகளுக்கு மத்தியில், தால் ஏரியின் நடுவில் இரண்டு நூற்றாண்டுகள் பழமையான, இரண்டு அறைகள் கொண்ட மிதக்கும் தபால் நிலையம் நிறுவப்பட்டது.
மிதக்கும் தபால் நிலையம் 1970 ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமரால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது மற்றும் 2011 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
இன்று, இது மூன்று முழுநேர ஊழியர்களைக் கொண்டுள்ளது மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள 1,700 நிரந்தர தபால் நிலையங்களில் ஒன்றாகும்.
தால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பல உள்ளூர் மக்களுக்கு, இந்த தபால் நிலையம் பல சேவைகளை செய்கிறது. அவர்களுக்கு இது நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான இடமாகவும் உள்ளது.
இந்தியர்களாகிய நாம் பல அற்புதமான காட்சிகளைக் காண உலகின் எல்லா மூலைகளுக்கும் பயணிக்கிறோம், ஆனால் நம்மில் பலர் பார்த்திராத , ஒருவேளை அறியாத அற்புதமான விஷயங்களும் இந்தியாவில் உள்ளன. அவற்றைக் கண்டு நம் நாட்டை நாம் ஆதரிப்போம்.