சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 20, 000 பேரை ஈரான் நாடு கடத்தியுள்ளது.
கடந்த ஒன்பது நாட்களில் ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது இந்த புலம்பெயர்ந்தோர் அடையாளம் காணப்பட்டதாக ஈரான் காவல்துறையினர் தெரிவித்தனர்.டோகாருன் மாவட்டத்தில் உள்ள தலிபான் பிரதிநிதியிடம் புலம்பெயர்ந்தோர் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் கூறினார்,
2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 3,28,000 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என அண்டை நாடுகளுக்கு தலிபான் அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்துவது தீவிரமடைந்துள்ளது, இப்போது ஈரானும் கட்டாய நாடுகடத்தலைத் தொடங்கியுள்ளது.