குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள சக்திபீத் அம்பாஜி கோவிலில் இன்று திரளான பக்தர்கள் இந்திய அணிக்காக பிராத்தனை செய்து, பூஜை வழிபாடும் செய்தனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 4 ஆம் இடத்தில இருந்த நியூசிலாந்து அணியுடன் விளையாடி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.
அதேபோல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா அரையிறுதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
அதேபோல் இந்த உலகக்கோப்பைத் தொடரில் நடக்காமல் வரலாறு மாறவேண்டும் என்றும் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்றும் இந்தியர்கள் இறைவனிடம் பிராத்தனை செய்துவருகின்றனர்.
அந்த வகையில் இன்று குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள சக்திபீத் அம்பாஜி கோவிலில் திரளான பக்தர்கள் இந்திய அணிக்காக பிராத்தனை செய்து, பூஜை வழிபாடும் செய்தனர்.
மேலும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் “கடந்த முறை எங்களால் பூஜை செய்ய முடியவில்லை, ஆகையால் இந்த முறை நாங்கள் பூஜை செய்கிறோம் இந்திய அணி அரையிறுதி மட்டுமில்லாமல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று அம்பாஜியிடம் பிராத்தனை செய்கிறோம்” என்று கூறினர்.