9 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!
Feb 10, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16-ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18-ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை முதல் 21-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

இன்று தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: chennai heavy rainfallmadurai heavy rain fall
ShareTweetSendShare
Previous Post

போர் தொடர்பான கருத்து: கனடா பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி!

Next Post

உஸ்பெகிஸ்தானில் மருத்துவ படிப்பை தொடரும் இந்திய மாணவர்கள்!

Related News

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது!

இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

வலங்கைமான் அருகே அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்து சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் – தலைமையை வழி நடத்துவதாக உ.பிக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை இருகூர் – போத்தனூர் இரு வழி ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் பணி நீக்கம் – அண்ணாமலை கண்டனம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையற்ற கடன் – நயினார் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

சேலம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே மோதல் – 4 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் வீசி தாக்குதல் – 3 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் இருவர் கைது

பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு!

மும்பையில் புர்கா அணிந்து மகளிர் ரயில் பெட்டியில் பயணித்த இளைஞர்!

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies