"செந்தில் பாலாஜியை மிஞ்சிய சிவசங்கர்!” ‘டாஸ்மாக்’ மாடல் தான் ஸ்டாலின் அரசு! - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 3, 2025, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“செந்தில் பாலாஜியை மிஞ்சிய சிவசங்கர்!” ‘டாஸ்மாக்’ மாடல் தான் ஸ்டாலின் அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மது காரணமாக ஏற்பட்ட விபத்து மற்றும் கொலை மூலம் மட்டும் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது, அதைப் பற்றி இந்த திமுக அரசுக்கு எந்த கவலையும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை அரியலூரில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

அரியலூரில் மட்டும் நெல், கரும்பு மக்காச்சோளம் என ஒரு லட்சம் ஹெக்டேருக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயர் பெற்ற அரியலூர் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலமாக ஒரு நாளுக்கு ஒரு லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதால், சிமெண்ட் சிட்டி என அழைக்கப்படுகிறது. ஆனாலும், தமிழகத்தின் மிகவும் பிற்படுத்தபட்ட பகுதிகளில் அரியலூரும் ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசு 2017ஆம் ஆண்டு வெளியிட்ட மாவட்டவாரியான மனித வளர்ச்சி குறியீட்டில், கடைசி இடத்தில் இருப்பது அரியலூர் மாவட்டம்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துறையில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல் மட்டும் 2000 கோடி ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சரது ஆட்கள் மூலமாக கமிஷன் வசூலித்து, கோபாலபுரத்துக்கு கப்பம் கட்டி வருகிறார். பதிலுக்கு, அவர் மனைவி நடத்தி வரும்,… pic.twitter.com/zv1U5fSlHw

— K.Annamalai (@annamalai_k) November 16, 2023

பாரதத்தில் இருந்து கடத்தப்பட்ட கடவுள் சிலைகளில், 1976 முதல் 2013 வரை, 13 சிலைகள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. ஆனால் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆனபிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கப்பட்ட அரியலூர் ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் ஆலய நடராஜர் சிலையை, 2014 நவம்பர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துறையில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல் மட்டும் 2000 கோடி ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சரது ஆட்கள் மூலமாக கமிஷன் வசூலித்து, கோபாலபுரத்துக்கு கப்பம் கட்டி வருகிறார்.

 

பதிலுக்கு, அவர் மனைவி நடத்தி வரும், கருத்தரிப்பு மையத்தின் விளம்பரப் பலகைகளை, அரசுப் பேருந்துகளில் வைத்துக் கொள்கிறார். செந்தில் பாலாஜி Cash for Job Scam அமைச்சர் என்றால், சிவசங்கர், cash for transfer அமைச்சர்.

வாகன ஆய்வாளர் பதவிகளுக்காக 30 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது புகார் உள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், அரியலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பிரதமரின் வீடு திட்டம், குழாய் குடிநீர், முத்ரா கடன் உதவி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கான நிதி, பிரதமரின் மருத்துவக் காப்பீடு என பல லட்சம் மக்கள் பலனடைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் மது விற்பனைத் துறை தான் இயங்கி வருகிறது. தீபாவளியை ஒட்டிய இரண்டு நாட்களில் மட்டும், தமிழகத்தில் மது காரணமாக ஏற்பட்ட விபத்து மற்றும் கொலை மூலம் மட்டும் 20 உயிரிழப்புகள். அதைப் பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. பாக்கெட் மது விற்று விற்பனையை எப்படி பெருக்கலாம் என்று மட்டுமே சிந்தித்து வருகிறார்கள்.

திமுக கூட்டணி கட்சியான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்தி, காவிரி நீரை குறித்த நேரத்தில், குறித்த அளவில் பெற்றுத் தராமல் திமுக வஞ்சித்ததன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 3.3 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது.

இதனால், விவசாயிகள் மட்டுமல்ல, சாதாரண ஏழை எளிய பொதுமக்களுக்கும் ரேஷன் அரிசி தட்டுப்பாடு வரக் காரணமாக அமைந்துள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாமர மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவோம். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal
ShareTweetSendShare
Previous Post

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழு ஆய்வு!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா பேட்டிங் !

Related News

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies