தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு ரசிகையின் காலில் திடீரென்று விழுந்து வணங்கியுள்ளார் தோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தன் மனைவி சாக்ஷியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு சென்றுள்ளார்.
தோனியிடம் ஆசீர்வாதம் வாங்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர் கிராம மக்களுடன் ஒன்றாங்க அமர்ந்து பேசியுள்ளார், மேலும் அவர்களோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார்.
அப்போது தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு ரசிகையின் காலில் திடீரென்று விழுந்து வணங்கியுள்ளார் தோனி.
தோனியின் காலில் விழ பல வீரர்கள் தவமிருக்கையில், தோனி பண்புடன் ரசிகையின் காலில் விழுந்து வணங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.