ஒன்பது ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 200 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் விலை பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பால் பவுடர், பாதாம் பவுடர், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் பாக்கெட்டானது பச்சை, ஆரஞ்சு, ஊதா எனப் பல்வேறு நிறங்களில் கொழுப்பு சத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இன்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ஒன்பது ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் வரும் ஆவின் பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது இருந்து பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு உட்பட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி திமுகவுக்கு வாக்களித்த மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.