அமெரிக்க சீன அதிபர்கள் சந்தித்து கொண்ட நிலையில், தைவான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் APEC உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற சீன அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இந்நிலையில், தைவான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகரித்துள்ளது. தைவான் ஜலசந்தியின் மீடியன் லைன் பகுதியில், சீனாவின் 9 போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தைவான் ஜலசந்தியின் சென்சிடிவ் மீடியன் லைன் வழியாக குறைந்தது ஒன்பது விமானங்களை பறப்பது மற்றும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகத்தில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவது உட்பட கிழக்கு ஆசிய நாடான தைவானைச் சுற்றி தனது இராணுவ நடவடிக்கையை சீனா அச்சமூட்டும் வகையில் அதிகரித்துள்ளது.
இந்த விமானம் சீன போர்க்கப்பல்களுடன் இணைந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதில் Su-30 மற்றும் J-10 போர் விமானங்களும், முன்னெச்சரிக்கை மற்றும் மின்னணு போர் விமானங்களும் அடங்கும் என தைவான் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, தைவான் அருகே சீனா பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை நடத்தியது, அதே நேரத்தில் அமெரிக்காவுடனான தைவானின் இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது எதிர்ப்பை மீண்டும் சீனா வலியுறுத்த தொடங்கியுள்ளது.
தைவானில் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. சீனாவுடனான தைவானின் உறவு தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.