வந்தே பாரத் இரயில், இன்று முதல், இரவு நேர சேவையைத் துவங்க உள்ளது.
நாட்டு மக்களின் நலன் கருதி, முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 33 வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்குத் திருப்பதி வழியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதனிடையே, சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று மாலை 5.15 மணிக்கு இரவு நேர வந்தே பாரத் இயக்கப்படுகிறது. அதேபோல, மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து, 21-ம் தேதி இரவு 11 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் இரயில் புறப்படுகிறது.
பயணிகள் நலன் கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், இரவு நேர சேவையைத் துவங்கியுள்ளதாகத் தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.