சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான் நவம்பர் 23, தெலுங்கானா நவம்பர் 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1760 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்கள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த 5 மாநிலங்களில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ரூ.239 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 7 மடங்கு அதிகமாக பரிசுப் பொருட்கள், மது, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.