தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!
Mar 15, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Nov 23, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இன்றைய வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி. புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: chennai heavy rainfall
ShareTweetSendShare
Previous Post

மதுராவுக்கு செல்லும் பிரதமர் மோடி!

Next Post

சிக்கலில் சீனா – சரிவில் ரியல் எஸ்டேட் துறை!

Related News

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies