இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்ட தொடரில் இருந்து விளக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஓராண்டாக எந்த ஒரு சர்வதேச டி20 ஓவர் போட்டியிலும் விளையாடவில்லை.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த டி20 ஓவர் உலகக்கோப்பை போட்டியே அவர் ஆடிய கடைசி டி20 ஓவர் போட்டியாகும்.
அதன் பிறகு பெரும்பாலும் ஹர்திக் பாண்டியா டி20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியை வழி நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் 36 வயதான ரோகித் சர்மா இனி சர்வதேச டி20 ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருப்பது என்று முடிவு செய்துள்ளார்.
தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த பிறகு அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ரோகித் சர்மா டி20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 148 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 3,853 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று வடிவங்கள் மற்றும் ஐ.பி.எல். விளையாடுவது சாத்தியமற்றது. மேலும் டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை ஏழு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட வேண்டிய அட்டவணையில் இருப்பதால், இந்திய கேப்டன் ரோகித்தின் கவனம் பெரும்பாலும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
2025யில் இந்தியாவை மற்றொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கான சாத்திக்கூறுகள் ரோகித் சர்மாவுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.