சனாதன தர்மத்தை காப்பாற்ற ஜல்லிக்கட்டை பாதுகாக்க வேண்டும் என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
பெங்களூருவில் பாரம்பரிய விளையாட்டான கம்பாளா விழா முதல் முறையாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பெங்களூரு தெற்கு தொகுதி எம்பியும், பாஜக யுவ மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசியவர், சனாதன தர்மத்தை’ காப்பாற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், ‘ஜல்லிக்கட்டு’ மற்றும் ‘கம்பாளா’ போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தடுக்க சில செயல்திட்டத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஜல்லிக்கட்டு”, “கம்பாலா” போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுகளை தடுக்க இன்று சில சக்திகள் நீதிமன்றங்களுக்கு செல்வதை காண்கிறோம் என்று கூறினார். இதனை தடுக்க கட்சிகளை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.