பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சராரோகா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்து 8 தீவரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டன.
கடந்த வாரம் கேபியின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படைகளின் வாகன அணிவகுப்பின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரு வீரர்கள் கொல்லப்பட்டனர்.