மைசூருவில் சட்ட விரோதமாக 900 கருக்கலைப்பு செய்த டாக்டர் மற்றும் லேப் டெக்னீஷியனை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரு நகரத்தில் டாக்டர் சந்தன் பலால் என்பவர் மருத்துவனை நடத்தி வந்தார். இவரது மருத்துவமனையில் நிசார் என்பவர் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக பல பெண்களுக்கு கருக்கலைப்புச் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த மருத்துவமனையில் சட்ட விரோதமாக 900 கருக்கலைப்பு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை மேலாளர் மீனா, வரவேற்பாளர் ரிஜ்மா கான் ஆகியோரை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், டாக்டர் சந்தன் பலால், லேப் டெக்னீஷியன் நிசார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுவரை மொத்தம் 900 கருக்கலைப்புகளைச் சட்ட விரோதமாக டாக்டர் சந்தன் பலால் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.