உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுரங்கத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்புப்பணியின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இன்று மாலைக்குள் நல்ல தகவல் வரும் என அவர் தெரிவித்தார். மனிதர்கள் மூலம் பக்கவாட்டு துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 57 மீட்டர் இலக்கு என்ற நிலையில், தற்போது வரை 55.3 மீட்டர் தூரத்திற்கு பைப்புகள் சொருகப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுரங்கத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்பூலன்ஸ்கள் தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கத்திற்கு உள்ளே எடுத்து செல்லப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.