2023 ஆம் ஆண்டுக்கான IV எல்லோபிரேகாட் ஓபன் செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு 2500 என்ற மதிப்பீட்டைத் தாண்டி, இந்தியாவின் 84 வது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்தியாவின் கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு வைஷாலி ரமேஷ் பாபு இப்போது இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான IV எல்லோபிரேகாட் ஓபன் செஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்தது. அதில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு 2500 என்ற மதிப்பீட்டைத் தாண்டி, இந்தியாவின் 84 வது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றார்.
கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு வைஷாலி இப்போது இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார்.
வைஷாலி ரமேஷ்பாபு, பிரபல செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி ஆவார். இப்போது இவர்கள் கிராண்ட்மாஸ்டர்களாக இருக்கும் முதல் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக மாறியுள்ளார்கள்.
வைஷாலி தனது இரண்டாவது சுற்றில் துருக்கிய நாடு வீரரை 2238 புள்ளிகளில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். தமிழக வீராங்கனை வைஷாலி தற்போது 2500 என்ற கிராண்ட் மாஸ்டர் அளவை தாண்டுவதற்கு 4.5 மதிப்பீடுகள் மட்டுமே தேவைப்பட்டன.
அவர் இப்போது 2501.5 நேரடி மதிப்பீட்டில் பெண்கள் தரவரிசையில் தற்போதைய உலகின் 11வது இடத்திலும், இந்தியாவின் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
வைஷாலிக்கு இந்த 2023ம் ஆண்டில் இறுதி ஒரு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது என்றே கூறலாம். இந்த மறக்கமுடியாத ஆண்டில், வைஷாலி FIDE மகளிர் கிராண்ட் ஸ்விஸ் 2023 யை வென்றார் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.