2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.
சிறந்த வார்த்தைக்கான தேர்வில் 8 வார்த்தைகள் பட்டியலிடப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மக்களின் மனநிலை மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் 8 வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கடந்த 12 மாதங்களில் இந்த ரிஸ் என்ற வார்த்தை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, இவை பொதுவாக காதலை வெளிப்படுத்தல் அல்லது கவர்ச்சிக்கான வார்த்தையாக இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ரிஸ் என்ற சொல்லுக்கு, கவர்ச்சி , காதல், வசீகரம், ஸ்டைல் மற்றும் இணையரை ஈர்க்கும் திறன் என்பதாகும்.
ரிஸ் என்ற சொல் கரிஷ்மா என்ற சொல்லின் மையப் பகுதியாகும். மேலும் ரிஸ் என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம்.