ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடரில் இன்று இந்தியா – ஸ்பெயின் அணிகள் விளையாயப்டுள்ளது.
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா குரூப் “சி”யில் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் இந்தியா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி இன்று நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் விளையாடவுள்ளது.
கடந்த ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தில் ஜொலித்த இந்திய அணி தடுப்பு யுக்தியில் கோட்டை விட்டது. 6 பெனால்டி கார்னர் வாய்ப்பை விட்டுக்கொடுத்த இந்திய அணி அதில் 2 கோலும் வாங்கியது.
எனவே வலுவான ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது.