தான்சானியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான வடக்கு தான்சானியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடேஷ் என்ற மலை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், ஏற்பட்ட பெருவெள்ளத்தால், அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் மூழ்கின.
மேலும், கனமழையால் அப்பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைகளில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. அப்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க இராணுவமும், மீட்புக் குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருந்து 5 ஆயிரத்து 600 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.