பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவு பேருந்துகளில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி மாதம் 14-ந் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ந் தேதி பொங்கல், 16-ந் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்பும் மக்கள், 13-ந் தேதி முதல் சென்னையில் இருந்து பயணத்தைத் தொடங்குவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது.
இதில், பயணம் செய்ய விரும்புவோர் நேரடியாகவும் அல்லது இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.