“திமுக தொண்டர்கள் உங்களை பார்த்து இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா… நீங்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு வருகிறீர்கள் என்று கேட்கலாமா” என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய வெள்ள நிவாரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,
அவங்க தாத்தா பதவியை, அவங்க அப்பன் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அப்படிதான் பேசுவார்.
சாதாரண திமுக தொண்டன் கூட உதயநிதியை பார்த்து கேட்க முடியுமே.. இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா என்று. கலைஞர் உரிமைத் தொகைனு சொல்றீங்களே.. அந்த பணத்தை என்ன உங்கள் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறீர்கள்? உதயநிதி முதலில் வார்த்தைகளை அடக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர் வாயை அடக்கவில்லை என்றால் அவர் ஒரு எதிர்மறை தலைவராக தான் எல்லோராலும் பார்க்கப்படுவார்.
கலைஞரோட பேரன் தானே நீங்க.. கலைஞர் இப்படிதான் பேசுவாரா? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் பேசக்கூடிய தலைவர் கலைஞர்.
எனவே, இப்படி பேசுவதை உதயநிதி ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மற்றவர்களும் அவரை பார்த்து அதே மாதிரி கேள்விகளை கேட்டு விடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.