இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 300 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் தயாராக இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 250 முதல் 300 தீவிரவாதிகள் ஊடுருவ எல்லையில் காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். எத்தகைய சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான தொடர்பு அதிகரித்துள்ளது என்றார். மக்கள் எங்களுடன் ஒத்துழைத்தால், வளர்ச்சி திட்டங்களை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று அவர் கூறினார்.
இதனிடையே சமூக ஊடக தளங்களில் பயங்கரவாதக் கதைகளைப் பரப்பி, அமைதியைக் குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.