மனிதர்களின் மரணத்தைத் துல்லியமாகக் கணிக்கும் ஒரு ஏஐ மாடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகமே தற்போது தொழினுட்பத்தைச் சார்ந்து தான் சென்றுகொண்டுள்ளது. எந்த ஒரு செயலை செய்தாலும் ஏதோ ஒரு தொழில் நுட்பத்தின் உதவியுடன் தான் செய்து வருகிறோம்.
இந்நிலையில் தற்போது உலகெங்கும் AI-யின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய வகை ஏஐ தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் பல புதிய ஏஐ மாடல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது மரணத்தைத் துல்லியமாகக் கணிக்கும் ஒரு ஏஐ மாடல் வெளியாகியுள்ளது.
Life2vec என்ற அல்காரிதம் என்ற ஒரு AI, இந்த துல்லியமான கணிப்புகளைக் கொடுக்கிறது. இந்த அல்காரிதம் தனது கணிப்புகளைத் தர வெறும் நான்கு முக்கிய தரவுகளை மட்டுமே நம்பியுள்ளது. இந்த 4 தரவுகளை வைத்துக் கொண்டே இதனால் 75% வரை துல்லியமாக மரணம் சார்ந்த தகவல்களைக் கணிக்க முடிகிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “ஒவ்வொரு நபரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் மனித வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்கிறோம்.
இப்படி மனித வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது ஒருவர் எப்போது இறப்பார் என்பதை நம்மால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது” என்கிறார்கள்.
டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஏஐ மாடலை உருவாக்கியுள்ளனர். 2008 முதல் 2020 வரையிலான 60 லட்சம் டென்மார்க் மக்களின் தரவுகளைக் கொடுத்து இந்த ஏஐ டூலை டிரைன் செய்துள்ளனர்.
மேலும் இந்த AI மாடல் 75% மட்டுமே துல்லியமாக இறப்பைக் கணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.