கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற தனியார் விழாவில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் புயல், மழை குறித்து வானிலை ஆய்வு மையம் முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தமிழக அரசுக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், திமுகவினர் தாங்கள் இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, வானிலை ஆய்வு மையம் மீது புகார் சொல்லிவிட்டு தப்பிக்க பார்க்கின்றனர்.
ஆனால், அதில் கவனம் கொள்ளாமல், இண்டி கூட்டணியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர் டெல்லி சென்றுவிட்டார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, கடைசியில் தான் பிரதமரையே சந்தித்தார்.
இது பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக பதில் தெரிவித்துள்ளார். அவரது பதிலில் குறை சொல்லமுடியாத திமுகவினர் மத்திய அரசையும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விமர்சனம் செய்கின்றனர்.
குறிப்பாக, அவரது ஜாதியை கொஞ்சைப்படுத்துவது, பெண் என பாராமல் இழிவுபடுத்துவது உள்ளிட்டவைகளை திமுகவினர் இனி நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் தக்க பாடம் புகட்டப்படும் என்றார்.