ஹிமாலசல பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாட்லிகுஹல் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள பாட்லிகுஹல் வனப்பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீயால் தீப்பிழம்புகள் வெளியேறி அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. தீ அணைப்பு துறையினர் அந்த தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த பயங்கர தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வன பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேச வனத் துறையின் அறிக்கையின்படி, அந்த மாநிலத்தில் மொத்தமாக 1195 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அறிக்கையின்படி, பிலாஸ்பூர், சம்பா, நஹன், ராம்பூர், சிம்லா மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான காட்டுத் தீ விபத்துகள் ஏற்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களால் மொத்தமாக 13275.17 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை மொத்தமாக 263 காட்டுத் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.