எதையும் எதிர்பாராமல் தன் கடமையைச் செய்வதே சிறப்பு என்று போதித்தவர் ரமண மகரிஷி எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தன்னை அறிதல் எனும் மகா தத்துவத்தைப் போதித்த மகான் ரமண மகரிஷி அவர்களது அவதார தினம் இன்று. தான் யார் என்பதை அறிய, இளம் வயதிலேயே உலக நாட்டங்களைத் துறந்து, துறவறம் பூண்டவர்.
தன்னை அறிதல் எனும் மகா தத்துவத்தைப் போதித்த மகான் ரமண மகரிஷி அவர்களது அவதார தினம் இன்று. தான் யார் என்பதை அறிய, இளம் வயதிலேயே உலக நாட்டங்களைத் துறந்து, துறவறம் பூண்டவர்.
எளிமையும், மனத்தூய்மையும் நிறைந்த ரமண மகரிஷி, உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றப்பட்டவர். எதையும்… pic.twitter.com/JMT0nREnHe
— K.Annamalai (@annamalai_k) December 30, 2023
எளிமையும், மனத்தூய்மையும் நிறைந்த ரமண மகரிஷி, உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றப்பட்டவர். எதையும் எதிர்பாராமல் தன் கடமையைச் செய்வதே சிறப்பு என்று போதித்தவர்.
ரமண மகரிஷி அவர்களது அவதார தினத்தில், உலக மக்கள் அனைவர் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்து வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.