மகரஜோதியொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.
மகரஜோதி தரிசனத்தை யொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் 31 -ம் தேதி முதல் வழக்கம் போல பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 15 -ம் தேதி அன்று, தை 1ஆம் நாள் மகர ஜோதி பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஜனவரி 20 -ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.
மகர ஜோதி தரிசனத்தையொட்டி, பதினெட்டாம்படி மற்றும் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன.