2023 ஆம் ஆண்டின் கடைசி நாளை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள் ஒரு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
இன்று இந்த வருடத்தின் கடைசி நாள். ஆகையால் அனைவரும் இந்த வருடத்தில் நடந்த தங்களுது அனுபவங்களை பற்றி நினைந்து பார்த்து மகிழ்ச்சியோடு நாளைய நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
இந்நிலையில் இன்று 2023-ம் வருடத்தின் கடைசி நாளுக்கு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதோடு அதில் GOOGLE என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் 3-வது எழுத்தாக உள்ள O என்ற எழுத்தில் உருண்டை மாதிரி இடம்பெற்றுள்ளது.
கூகிள் முதல் பக்கத்தில் அன்றைய நாட்களுக்கான சிறப்பு வாய்ந்த நபர்கள், நகரம், சின்னம், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை கௌரவப்படுத்தவும் நினைவுகூரவும் வகையில் டூடுலை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.