சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்கி, ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, வாசகர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமாக எதிர்பார்ப்பது, சென்னை புத்தகக் கண்காட்சி தான்.
இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, விரும்பிப் படிக்கும் சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய – இலக்கண நூல்கள், வாழ்க்கை வரலாறு, கவிதைகள் தொடர்பான புத்தகங்கள் என அனைத்தும் கிடைக்கும். இதன் காரணமாக, சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள். அதுமட்டுமல்லாமல், சிறப்புத் தள்ளுபடி விலையில் புத்தகம் விற்கப்படுவதால், புத்தகப்பிரியர்கள் இந்தக் கண்காட்சியைத் தவறவிடுவதில்லை.
இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த கண்காட்சி ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புத்தகக் கண்காட்சியானது, விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.