விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மாவீரர் வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பதிவில்,
விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை #வேலுநாச்சியார் மற்றும் மாவீரர் #வீரபாண்டியகட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளில் அவர்களை தேசம் பணிவுடன் வணங்கி மரியாதை செலுத்துகிறது. அடங்காத துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் இணையற்ற வீரத்துடன் நமது வரலாற்றின் மிக முக்கியமான சுதந்திர கால போராட்டத்தின் தீப்பொறியை ஏற்றி, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஒன்றுபடவும் போராடவும் எண்ணற்ற மக்களை அவர்கள் தூண்டினர்.
விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை #வேலுநாச்சியார் மற்றும் மாவீரர் #வீரபாண்டியகட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளில் அவர்களை தேசம் பணிவுடன் வணங்கி மரியாதை செலுத்துகிறது. அடங்காத துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் இணையற்ற வீரத்துடன் நமது வரலாற்றின் மிக முக்கியமான சுதந்திர கால… pic.twitter.com/84mz4rYEas
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 3, 2024
அவர்கள் அனுபவித்த மிகப்பெரிய துன்பங்களும் மிகுதியான தியாகங்களும் 2047க்குள் #வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய கடமைகளை என்றும் நமக்கு நினைவூட்டும். – ஆளுநர் ரவி என குறிப்பிட்டுள்ளார்.