தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்ற பெயரில் ஆவின் நிறுவனம் இயங்குகிறது.
இந்த நிறுவனம், பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல், விற்பனை உள்ளிட்ட பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த நிலையில், 180 மிலி ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் 10 மிலி அளவை கூடுதலாக்கி விட்டு அதன் விற்பனை விலையை பாக்கெட்டிற்கு 50 காசுகள் உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி சுற்றறிக்கையில் திமுகவின் கறுப்பு, சிவப்பு வண்ணத்தில் கருணாநிதி நூறாண்டு இலச்சினை இடம் பெற்றுள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள், ஆவின் நிறுவனம் தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமா? அல்லது திமுகவின் சொந்த நிறுவனமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.