ஓட்டுநர் உரிமங்கள், பான் கார்டுகள் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கர் மூலம் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம். மேலும் உங்கள் கணக்கிற்கான முதன்மை உள்நுழைவு அங்கீகாரமாக செயல்படும் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கும் வசதியை செயல்முறை படுத்திவருகின்றது.
டிஜிட்டல் லாக்கர் என்றும் குறிப்பிடப்படும் DigiLocker, ஒரு டிஜிட்டல் ஆவணக் களஞ்சியமாகச் செயல்படுகிறது, இதில் ஓட்டுநர் உரிமங்கள், PAN அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் பல ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து, பதிவேற்றி பெற்றுக்கொள்ளலாம். DigiLocker கணக்கை உருவாக்கும் போது, ஒவ்வொரு பயனரும் தங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ‘பிரத்யேக கிளவுட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்’ கொண்டு, தங்கம் ஆவணங்களைப் பதிவேற்றிச் சேமிக்கலாம்.
மக்கள் தங்கள் முக்கிய ஆவணங்களை எங்கு சென்றாலும் கையில் எடுத்து செல்வதை தவிர்க்கவும், காகிதங்களின் தேவைகளை குறைக்கவும் டிஜிட்டல் லாக்கர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில்
இ- ஆவணங்களாக பாதுகாத்து, பகிர்ந்து கொள்ள முடியும். மக்கள் எளிதில் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் டிஜிலாக்கர் கணக்கை துவங்கலாம். மேலும் தங்கள் மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.
டிஜிலாக்கரில் மொபைல் எண் மாற்ற முதலில்,
- டிஜிலாக்கர் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
- உங்கள் பெயர் மற்றும் பாதுகாப்பு எண் கொண்டு டிஜிலாக்கர் கணக்கை login செய்யவேண்டும்
- உங்கள் மொபைலிற்கு அனுப்பப்படும் ஒடிபி எண்ணை கொண்டு login செய்யவேண்டும்
- OTP நுழைவுப் பெட்டியின் கீழே உள்ள “உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்” விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- உங்கள் ஆதார் அட்டையுடன் தொடர்புடைய மொபைல் எண்ணுக்கு UIDAI அனுப்பிய OTP ஐ உள்ளிடவும்.
- உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் உள்நுழைவு விவரங்களைச் சரிபார்க்க உங்கள் புதிய மொபைல் எண்ணுக்கு டிஜிலாக்கர் அனுப்பிய OTP ஐ உள்ளிடவும்.
- மாற்றப்பட்ட மொபைல் எண்ணின் உறுதிப்படுத்தல் அறிவிப்பு உங்கள் டிஜிலாக்கர் கணக்கிற்கு அனுப்பப்படும்.
டிஜிலாக்கர் குறித்து அதிகம் கேட்கப்படும் கேள்விகள்
டிஜிலாக்கர் கணக்கு வைத்துக்கொள்ள முடியுமா ?
தொலைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஒரு டிஜிலாக்கர் கணக்கை மட்டுமே திறக்க முடியும் . ஆனால் உங்களிடம் ஏற்கனவே டிஜிலாக்கர் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பல கணக்குகளைத் திறக்கலாம்.
மொபைல் எண் இல்லாமல் டிஜிலாக்கர் வசதி பெறமுடியுமா ?
உங்கள் டிஜிலாக்கர் கணக்கில் இருந்து வெளியேறிய பிறகு மீண்டும் இணைய ஆதார் எண் கொண்டு இணையலாம் அதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபியை கொண்டு இணையலாம்.
உங்களிடம் இரண்டு DigiLocker கணக்குகள் இருந்தால் என்ன நடக்கும்?
நீங்கள் பதிவு செய்ய முயற்சிக்கும் ஆதார் எண் ஏற்கனவே மற்றொரு DigiLocker கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் போது இந்த பிழை செய்தி பொதுவாக தோன்றும். ஒரே ஆதார் எண்ணுடன் பல கணக்குகளை இணைக்க DigiLocker அனுமதிப்பதில்லை.
எனது டிஜிலாக்கர் கணக்கை ஏன் என்னால் சரிபார்க்க முடியவில்லை?
டிஜிலாக்கர் கணக்கை உருவாக்கும் செயல்முறையின் போது நீங்கள் சரியான ஆதார் எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதையும், அதே எண் டிஜிலாக்கரில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.
டிஜிலாக்கரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகளைச் சேர்க்கலாமா?
ஒருவர் பல DigiLocker கணக்குகளை உருவாக்கலாம்; இருப்பினும், நீங்கள் ஒரு கணக்குடன் மட்டுமே ஆதார் அட்டையை இணைக்க முடியும்.