இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கௌதம் அதானி தலைமையிலான அகமதாபாத்தின் அதானி குழுமம், இந்தியாவில் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமாக உள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் உலகளாவிய நிலக்கரி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், மார்ச் 31, 2023 அன்று முடிவடையும் நிதியாண்டில் $17 பில்லியன் வருவாயை ஈட்டியது.
இந்நிலையில் ‛புளூம்பெர்க்’ வெளியிட்ட பட்டியலில், இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.அவருக்கு 97.6 பில்லியன் டாலர் சொத்து உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலர் ஆக உள்ளது.
அதேநேரத்தில், உலக பணக்காரர் பட்டியலில் அதானி 12வது இடத்திலும், முகேஷ் அம்பானி 13வது இடத்திலும் உள்ளனர்.
34.6 பில்லியன் டாலர்களுடன் ஷாபூர் மிஸ்ட்ரி 38வது இடத்திலும், ஷிவ் நாடார் 33 பில்லியன் டாலர்களுடன் 45வது இடத்தையும் பிடித்துள்ளனர்.