இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க, அதிக குருகுலங்கள் தேவை! - ராஜ்நாத் சிங்
Oct 7, 2025, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க, அதிக குருகுலங்கள் தேவை! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Jan 6, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவீன கல்வியை வழங்கும் நிலையில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க நாட்டில் அதிக குருகுலங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள சுவாமி தர்ஷானந்த் குருகுல மகாவித்யாலயாவில் இன்று (ஜனவரி 06, 2024 ) நடைபெற்ற புதிய குருகுல அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது உரையாற்றியவர்,

வெளிநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால் தார்மீக மதிப்புகள் சீரழிந்து வருவதாகக் கூறினார். இந்த நேரத்தில், இளைஞர்களிடையே தார்மீக விழுமியங்களை உள்ளடக்கிய நவீன கல்வியை வழங்க குருகுலங்கள் முன்வர வேண்டும் என்று  கூறினார்.

சுமார் 1,000 முதல் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டில் பல பெரிய பல்கலைக்கழகங்கள் இருந்தன என்றும், அவற்றில் குருகுல பாரம்பரியம் பரவலாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகு, வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் அந்த அமைப்பை கிட்டத்தட்ட அழித்ததாக தெரிவித்தார். நாட்டின் பண்பாட்டு உணர்வுக்கு ஏற்றதாக அல்லாமல் கல்வி வழங்கும் முறை மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.  அதில் இந்திய கலாச்சாரம் தாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்டது என்றும் அந்த உணர்வு நம்மை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதித்தது என கூறினார்.

அந்த நேரத்தில், சுவாமி தர்ஷானந்த் இந்த குருகுலத்தை நிறுவியதாகவும் இது நமது இளம் தலைமுறையினருக்கு ஒளியூட்டுகிறது என்று கூறினார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி குறிப்பிட்டவர், ஆரம்பக் கல்வி முதலே இளைஞர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை வளர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளதாகக் கூறினார். நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்களில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.  இந்த நீண்ட செயல்பாட்டில் குருகுலங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று கூறினார்.

குருகுலங்கள் பழங்காலக் கல்வி முறைகளை மட்டுமே பின்பற்றுகின்றன என்ற தோற்றம் சிலரிடம் உள்ளதாகவும், ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவை முன்னேறி நவீனமாகிவிட்டன என்று சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பாரம்பரிய கல்வியுடன் இணைந்து முன்னேறுமாறு குருகுலங்களை அவர் வலியுறுத்தினார்.

குருகுலங்கள் மீண்டும் நாட்டையும் அதன் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியாவின் புதிய அடையாளமாக மாற வேண்டும் என்று கூறினார்.

நாட்டின் கலாச்சார வளர்ச்சியில் குருகுலங்கள் வகிக்கக்கூடிய பங்கை சுட்டிக் காட்டினார். கலாச்சார மேம்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார்.

யோகாவைப் பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாகக் கருதப்பட்ட இந்த யோகக் கலை, இன்று உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், இப்போது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

3 மாநிலங்களில் 81.78% கொரோனா பாதிப்பு!

Next Post

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்கு: பா.ஜ.க. விமர்சனம்!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies