கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப் பகுதி ஆனெக்கல். இதன் அருகில் கோபசந்தரா, முத்தாநல்லூர் பிரதான சாலை உள்ளது. இங்கு பொதுமக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த நிலையில், இங்கு அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி பொது மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அங்கு பொது மக்கள் குடியிருக்கும் வீடு அருகே சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. சிறுத்தை கம்பீமராக வரும் காட்சியை அப்பகுதியில் உள்ள ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனெக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொது மக்கள் கூறிவரும் நிலையில், இந்த வீடியோ அதை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறுத்தையை பிடிக்க ஏற்கெனவே வனத்துறை கூண்டு வைத்துள்ள நிலையில், சிறுத்தை கூண்டில் அகப்படாமல் தப்பித்து வருவதாகவும், அதை விரைவில் பிடித்துவிடுவோம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சிறுத்தைக்கு பொது மக்கள் பலியாகும் முன்னர் சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.