கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில், 41.65 சதவீத பாதிப்பு, கர்நாடகாவில் மட்டும் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புதிதாக 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 31 ஆக உள்ளது. மேலும், 441 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் புதிதாக 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 891 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 105 பேர் மீண்டுள்ளனர்.
கேரளாவில் புதிதாக 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 723 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 214 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 179 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 21பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.