மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்காக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பொதுமக்களின் மரணத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், சமீபத்திய மத்திய கிழக்கு மோதல்கள் தொடங்கியதில் இருந்து அதன் “தெளிவான மற்றும் நிலையான” செய்தி, மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதையும், மற்றும் நிலைத்தன்மை, அமைதியை சீக்கிரம் மீட்டெடுப்பதையும் உறுதி செய்வதாக இந்தியா கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து ஐ.நா பொதுச் சபையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் உரையாற்றினார்.
அப்போது பேசியவர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் உயிரிழப்பதாகவும், மனிதாபிமான நெருக்கடி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இது வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பொதுமக்களின் மரணத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார். காசாவில் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் பிராந்தியத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தார்.
அதே நேரத்தில், உடனடி தூண்டுதலாக, அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்கு சந்தேகத்திற்கு இடமில்லாத கண்டனத்திற்கு உரியது. பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது எனக் கூறினார்.