டெஸ்ட் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த தொடரில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்று போட்டி சம நிலையில் முடிந்தது.
அதேபோல் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடங்கள் :
கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, டேரில் மிட்செல், விராட் கோலி, ஹாரி புரூக், பாபர் ஆசம், உஸ்மான் கவாஜா, ரோகித் சர்மா.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்கள் :
ரவிச்சந்திரன் அஷ்வின் , பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஒல்லி ராபின்சன்,
ஜோஷ் ஹேசில்வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்செல் ஸ்டார்க், பிரபாத் ஜெயசூர்யா.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் முதல் 10 இடங்கள் :
ரவீந்திரன் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், அக்சர் படேல், ஜேசன் ஹோல்டர், மார்கோ ஜான்சன், கைல் மேயர்ஸ், மிட்செல் ஸ்டார்க்.