ஜனவரி 22 -ம் தேதி அயோத்தி ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போது, கோவிலில் ராமர் சிலை திறக்கப்பட உள்ளது. இதற்காக, ராமர் சிலை பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
இதேபான்று, அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீராமர் கோவிலுக்கு பிரமாண்ட வகையில் ஆலய மணி அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2400 கிலோ எடையுள்ள இந்த ஆலய மணி பித்தளை, வெண்கலம், தாமிரம், அலுமினியம், இரும்பு, தங்கம், வெள்ளி மற்றும் துத்தநாகம் அடங்கிவைகளால் செய்யப்பட்டுள்ளது
இந்த ஆலய மணி தயராக்க பிரபல தொழில் அதிபர்கள் ஆதித்யா மிட்டல் மற்றும் பிரசாந்த் மிட்டல் ஆகியோர் 25 லட்சம் ரூபாயில் அளித்துள்ளனர். இந்த நிலையில், ஆலய மணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஜலேசரில் செய்யப்பட்ட ஆலய மணியை நகராட்சி தலைவர் விகாஸ் மிட்டலின் உறவினர்கள் தயார் செய்துள்ளனர். இந்த ஆலய மணியை அயோத்திக்கு கொண்டு செல்ல தேர் தயார் செய்யப்பட்டு, ஜனவரி 9 -ம் தேதி மதியம் 2 மணிக்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் ஆலய மணி ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆலய மணி, பித்தளை, வெண்கலம், தாமிரம், அலுமினியம், இரும்பு, தங்கம், வெள்ளி மற்றும் துத்தநாகம் அடங்கிவைகளால் செய்யப்பட்டுள்ளது.
2400 கிலோ எடையுள்ள ஆலய மணியை உருவாக்க 21 நாட்கள் எடுத்துக் கொண்டனர். இந்த பணியில் 70 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.