இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள ஹனுமான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் தான் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தி முன்னிட்டு இப்படம் நேற்று வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் இப்படம் வெளியானது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயரும், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் நேற்று தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹனுமான் திரைப்படம் முதலில் நாளில் உலகளவில் ரூ.11.91 கோடியை வசூலித்துள்ளது.
தெலுங்கில் ரூ.5.50 கோடியும், ஹிந்தியில் ரூ. 2 கோடியும் இந்தப்படம் வசூலித்துள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படம் மேலும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.