பக்தர்கள் பாதணிகளை பாதுகாத்த மூதாட்டி ராமர் கோவிலுக்குத் தான் 30 வருடங்களாகச் சம்பாதித்த ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இக்கோவில் கட்டுவதற்காகப் பல பொதுமக்களும் தங்களின் சக்திக்கு ஏற்ப தங்களால் இயன்றதைச் செய்துவருகின்றனர்.
அந்த வகையில் ஒரு வயதான மூதாட்டி செய்த செயல் இங்கு அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயது கொண்ட யசோதா என்ற ஒரு மூதாட்டி, அவர் 20 வயதில் இருக்கும் போது, தன் கணவரை இழந்தார்.
பிறகு தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன வேலை செய்யலாம் என்று யோசித்த அவர் கோவிலுக்கு வெளியே அமர்ந்து பக்தர்களின் பாதணிகளை பாதுகாக்கும் வேலையை தேர்ந்தெடுத்தார்.
30 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்த பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கே பிகாரி கோவில் முன்பு அமர்ந்து பக்தர்கள் பாதணிகளை பாதுகாத்து வந்தார்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.300 சம்பாதித்தார். இப்படி தினமும் சம்பாதித்து 30 ஆண்டுகளில் ரூ.51,10,025 சேர்த்து வைத்தார்.
தான் கடினமாக உழைத்துச் சம்பாதித்த இந்த பணத்தை என்ன செய்தார் என்று தெரியுமா ?
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ ராமர் கோவிலுக்கு நன்கொடையாகத் தான் 30 வருடமாகச் சம்பாதித்த ரூ.51,10,025 பணத்தை வழங்கியுள்ளார். இது இவர் ஸ்ரீ ராமர் மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துகிறது.