தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.