உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தை ஒட்டி, உலக நலன், பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான புதிய கூட்டணியை இந்தியா அறிவித்தது. இதற்கு, உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும், தலைவருமான கிளாஸ் ஷ்வாப் முழு ஆதரவுடன் பங்களிக்க முன்வந்திருக்கிறார்.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஹர்தீப் சிங் பூரி மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் கிளாஸ் ஸ்வாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தான், உலகளாவிய நன்மை, பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான புதிய கூட்டணியை இந்தியா அறிவித்திருக்கிறது. இந்த புதிய கூட்டணியின் முதன்மையான நோக்கம் என்னவென்றால், உலகளாவிய சிறந்த நடைமுறைகள், அறிவுப் பகிர்வு மற்றும் பெண்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் நிறுவனங்களின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முதலீடுகளை ஒன்றிணைப்பதாகும்.
மேலும், இக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் G20 கட்டமைப்பின் கீழ் உள்ள முன்முயற்சிகள், வணிகம் 20, பெண்கள் 20 மற்றும் G20 அதிகாரம் ஆகியவற்றின் கீழ் பெரிய உலகளாவிய சமூகத்தின் நலனுக்காக G20 தலைவர்களின் உறுதிமொழிகளை கூட்டணி முன்னோக்கி எடுத்துச் செல்லும்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “இக்கூட்டணியின் யோசனை ஜி20 தலைவர்களின் பிரகடனத்தில் இருந்து உருவானது. பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பு. உலகப் பொருளாதார மன்றம் இந்தியாவுக்கு மிகவும் வலுவான ஆதரவாக இருப்பதற்கு நன்றி” என்றார்.
தொடர்ந்து பேசிய உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும், தலைவருமான கிளாஸ் ஷ்வாப், “இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு. கூட்டணிக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல் வலுவான பங்காளியாகவும் உலகப் பொருளாதார மன்றம் இருக்கும். தேர்தல் ஆண்டில் இவ்வளவு வலிமையான தூதுக் குழுவை இந்தியா அனுப்பியதற்கு நன்றி” என்றார்.